search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெட் போண்டா"

    காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா. இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பிரட் துண்டுகள் - 10 (ஓரம் நீக்கவும்),  
    எண்ணெய் - தேவையான அளவு.

    ஸ்டஃப் செய்ய :

    உருளைக்கிழங்கு - 2 ,  
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
    மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்),
    நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளிவை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், புதினா, முந்திரி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    இந்த கலவை சூடு ஆறியதும் பிசைந்து, சிறிய உருண்டைகள் செய்யவும்.

    பிரெட்டை நீரில் நனைத்து எடுத்து, உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிந்து, உருட்டிய மாவை பிரெட் நடுவே வைத்து நன்கு மூடி, மீண்டும் உருட்டவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள போண்டாவை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் போண்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×